விவரம்
கொடிகாமம் மாணவிக்கு துவிச்சக்கரவண்டி உதவி தேவை!
கொடிகாமம் வடக்கில் வசிக்கும் ஒரு சின்னஞ்சிறு மாணவி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகிறார். தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் கால்நடையாக நடந்து தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் மாணவியின் தாயார்.
இந்த சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அம்மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு தடையின்றி கல்வியைத் தொடர, பள்ளி அதிபர் துவிச்சக்கரவண்டி உதவிகோரி முன்வந்துள்ளார்.
தேவையான உதவி: துவிச்சக்கரவண்டி
தேவையான தொகை: CHF 160.-
இந்த உதவி ஏன் முக்கியம்:
- துவிச்சக்கரவண்டி இருந்தால், அம்மாணவியின் தாயார் எளிதில் தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியும்.
- இதனால், அம்மாணவியின் கல்வியில் கவனம் செலுத்த முடியும்.
- வறுமை காரணமாக கல்வியை விட்டு விலகும் நிலை ஏற்படாமல் தடுக்க முடியும்.