எம்மைப் பற்றி

About us

விடியல் பற்றி

விடியல் ஒரு இலாபநோக்கற்ற அமைப்பாகும். வடகிழக்கு இலங்கையில், கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேவைப்படுபவர்களுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்க பலரும் விருப்பம் கொண்டிருந்தாலும், எப்படி மற்றும் யாருக்கு என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும் காரணத்தால், அவர்களைக் கண்டறிந்து, உங்கள் உதவிகள் தேவையானவர்களை சரியானமுறையில் சென்றடையச் செய்யும் முக்கிய இலக்குடன் எங்கள் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வரணி ஒன்றியம் சுவிஸ் ஊடாக, தேவைப்படும் மக்களுக்கு, கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளை வழங்கி, வரணி சமூகத்திற்கு ஆதரவளித்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஒன்றியத்தின் பெயரில் செய்துள்ளோம்.

விடியலினூடாக பரந்துபட்ட பகுதிகளுக்கும் உதவிகளை உங்கள் பெயரில் உரியவர்களிடம் கொண்டுசேர்க்கும் ப‌ணியை புதியமுறையில் தொடங்கியுள்ளோம்

We’re here to support poor people

மகிழ்ச்சி என்பது நாம் பெறுவனவற்றிலிருந்து வருவதில்லை, நாம் கொடுப்பதில் இருந்து விளைகிறது.

Frequently Asked Questions

அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்:

நீங்கள் வழங்கும் உதவித்தொகை, உங்களின் பெயரிலேயே உரியவர்களிடம் கொடுக்கப்படும்.
விடியல் ஒரு உதவிப்பாலமாகவே செயல்படும்.

உங்கள் உதவி, உரியவர்களை சென்றடைந்தபின், கொடுத்ததற்கான, சான்றிதழ் அல்லது புகைப்படம், உதவியவர்களுக்கு அனுப்பப்படும்.

இல்லை, நீங்கள்
உங்களுக்கு விரும்பிய தொகையை வழங்கலாம்.
உ.ம்.: ஒருவரிக்கு 500 Fr. தேவைப்பட்டால், நீங்கள் 20 Fr. இல் இருந்து 500 Fr. வரை எந்தத் தொகையையும் கொடுக்கலாம்.